அடுத்த மூன்று மாதங்களில் இயல்பைவிட வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

அடுத்த மூன்று மாதங்களில் இயல்பைவிட வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

புதுடில்லி, ஏப். 4- இந்தியாவில் அடுத்து வரும் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்து உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெ ரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா காணொலிக்காட்சி வழியாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு கோடை காலத் தில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல் பைவிட வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும். தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப் பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறை வான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும்.

பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிர தேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகாராட்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாள்களின் எண்ணிக்கை அதிக மாக இருக்கும். ஒரு இடத்தின் சமவெளியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சி யஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், கடலோரப்பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் (86 டிகிரி பாரன்ஹீட்) என்ற அளவில் இருக்கிறபோது அது வெப்ப அலை என அறிவிக்கப் படுகிறது. இந்தியாவில 1901ஆம் ஆண்டில் இருந்து வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது. இந்த கால கட்டத்தில் பிப்ரவரி மாதத்தைப் பொறுத்தமட்டில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மிகுந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment