செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
சென்னை, ஏப்.21 மக்கள் அதிகமாக பார்வை யிடும் நினைவிடங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளில் உடனடியாக அந்த இடங்களின் வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு! அவர்களின் மக்கள் நலத் தொண்டுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள அந்தச்சிலை களின் கீழே கியூஆர் கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தெரிவித்துள் ளார். முதல்முதலாக திருவள்ளுவர் சிலை யிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர் களின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சுவாமி நாதன் கூறும்போது,
ஒருவாரத்திற்குள் நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளின் அருகில் கியூ ஆர் ஸ்கேனர் கோடுகளைப் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்படும், ‘‘மாநிலத்தில் 81 நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த இடங்களில் நினைவகங்களில் முப்பரிமாண முறையில் ஒளிப்படம் எடுக்கும் பணி தொடங்கப்படும். பின்னர் அந்த ஒளிப்படங்கள் www.tndipr.com இல் பதிவேற்றப்படும். இதன்மூலம் பொதுமக்கள் நினைவுச்சின்னங்களின் முழு அமைப்பையும் பார்க்கலாம்.
முதலில் சென்னையில் 15 சிலைகள் மற்றும் நினைவிடங்களில் இந்த க்யூஆர் கோட் வைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவிற்கு வந்து விட்டது. தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய இடங்களிலும் இன்னும் 2 மாதங்களுக்குள் பணிகள் முடிந்துவிடும் என்று அமைச்சர் கூறினார்.
QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலகம் முழுவதும் அனை வராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது. இவற்றில் உள்ள குறியீடுகள் பல வண்ணங்களில் சதுரங்களின் வரிசையைக் கொண்டதாகும். கைபேசி காமி ராவைப் பயன்படுத்தி குறியீட்டில் இருக்கும் முழுமையான விவரங்களைக் காணமுடியும்.
No comments:
Post a Comment