நிலத்தின் வழிகாட்டி மதிப்பு விரைவில் சீரமைப்பு பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு விரைவில் சீரமைப்பு பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

சென்னை. ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தம் நேற்று (10.4.2023) நடைபெற்றது. 

உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:

தமிழ்நாட்டின் பதிவுத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. பத்திரம் பதிவு செய்ய வருபவர் 70 வய தைக் கடந்தவராக இருந் தால், அவரைக் காத்தி ருக்க வைக்காமல், உடன டியாக பத்திரப் பதிவை மேற்கொள்ளும் திட்டத்துக்கு மக்களி டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத் தில் வழிகாட்டி மதிப் பைக் குறைத்து, பதிவுக் கட்டணத்தை அதிகரித்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட் டது. மேலும், வெளிச் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை பிரதிபலிக்காத தால், வங்கிகளில் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். 

இதனால் இதில் மாற் றம் கொண்டு வர வேண் டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக் கைகள் வந்தன. அதனடிப் படையில்தான் வழி காட்டி மதிப்பு உயர்த்தப் பட்டு, பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், சீரான வழி காட்டி மதிப்பை உருவாக்குவதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கும் பரிந்து ரைகளின் அடிப்படை யில், வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் ந டைமு¬ றப் படுத்தப்படும்.

ஆவணங்கள் பதிவில் இணையதள சேவை அதிகமாகியுள்ளது. தற்போது செயல்படுத் தப்படும் ஸ்டார் 2.0 திட்டத்துக்கான சர்வரின் வேகம் குறை வாக உள்ளது. எனவே, இணையதள வேகத்தை அதிகரிப்பதற்காக ஸ்டார் 3.0 திட்டம் ரூ.328 கோடியில் உருவாக்கப் படும்.

சென்னை, மதுரை, கோவையில் அதிக எண்ணிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால், அங் குள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் முன்னணி அலுவல கங்களாக மேம்படுத்தப் படும். இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment