சென்னை, ஏப். 19- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம் மானியம் ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் என்.கயல் விழி செல்வராஜ் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.4.2023) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளி யிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் பேசியதாவது:
மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், முன்னேற்றத்துக்கான அடிப்படை வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ளவும் தற்போது தாட்கோ மூலம் வழங் கப்படும் ரூ.2.50 லட்சம் மானியம் ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப் படும்.
வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 4 ஆதிதிராவிடர் மாண வர் விடுதிகளுக்கு ரூ.25 கோடியில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட் டப்படும். விடுதிகளில் ஏற்படும் சிறுபராமரிப்பு, பழுதுபார்ப்பு மற் றும் மாணவர்களின் எதிர்பாரா மருத்துவ செலவுகளுக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கப்படும். விடுதிகளில் சிறப்புப் பராமரிப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு வசதிகள் ரூ.25 கோடியில் மேற் கொள்ளப்படும்.
கல்லூரி விடுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய கற்றல் கற்பித் தல் அறை ரூ.10 கோடியில் அமைக் கப்படும். விடுதியில் உள்ள 10 மற் றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 கோடியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை சமூகப் பணி கல்லூரியில் ரூ.2 கோடி மானியத்தில் சமூகநீதி மற்றும் சமத்துவ மய்யம் நிறுவப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை கள் குறித்து புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன்கூடிய உதவி மய்யம் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 37 வகை யான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு இனவரவியல் ஆய்வு ரூ.3.50 கோடி யில் மேற்கொள்ளப்படும். பழங் குடியினர் வசிக்கும் மலைப் பகுதிக ளில் இணையதள இணைப்பு வசதி ரூ.10 கோடியில் ஏற்படுத்தப்படும்.
திட்ட கண்காணிப்பு அலகு
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்க ‘திட்ட கண்காணிப்பு அலகு’ ஏற்படுத்தப்படும். ரூ.10 கோடியில் பழங்குடியின மக்களுக்கான வாழ் வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்குரூ.45 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும்.
தாட்கோ திட்டங்கள் தற்கா லத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற் கான நுழைவுத் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படும் என்பன உள்ளிட் 25 அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.
வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 4 ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும். விடுதிகளில் ஏற்படும் சிறு பராம ரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாணாக்கரின் எதிர்பாரா மருத் துவச் செலவினம் ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 23 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டம் ரூ.3.75 கோடி செலவில் செயல் படுத்தப்படும்.
விடுதிகளில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப்பதிவு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப் படும்.
கல்லூரி விடுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் கற்பித்தல் அறை ரூ.10 கோடி மதிப் பீட்டில் அமைக்கப்படும். விடுதி களில் தங்கிக் கல்வி பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக் கருக்கு ரூ.1 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை சமூகப் பணி கல்லூரியில் (Madras School of Social Work) ரூ.2 கோடி மானியத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவ மய்யம் (Centre for Social Justice and Equality) நிறுவப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான வன்கொடு மைகள் குறித்த புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மய்யம் ஏற்படுத்தப்படும். அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணாக்கருக்கு உட்பயிற்சி (Internship) உதவி வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் எழுத்தாளர்களின் சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படும்.
மாணாக்கர் விடுதிகளில் புத்துணர்வு அளிக்கும் செயல்களில் ஈடு படுவதை ஊக்குவிக்கும் வகையில் மன்றங்கள் உருவாக்கப்படும்; வெளிநாடுகளில் கல்வி பயில்வோ ருக்கான கல்வி உதவித் திட்டம் இரண்டு திட்டக் கூறுகளாக திருத்தி அமைக்கப்படும்.
No comments:
Post a Comment