சென்னை,ஏப். 16- எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-பி. குரூப்-சி பதவிகளில் 7,500 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட் டுள்ளது.
பட்டப் படிப்பு தரத்திலான இத்தேர்வுக்கு மே 3ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (<www.ssc.nic.in>) விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு அனைத்து மாவட் டங்களிலும் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்களில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள் <www.tamilnaducareerservices.tn.gov.in> என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்திலும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின்"AIM TN" என்ற யூடியூப் சேனலிலும் இத்தேர்வுக்கான காணொலிகளை கண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment