சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள்மீது தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை, ஏப்.21 சட்டமன்ற தொடர் முடியும் இந்நாளில், (21.4.2023) திராவிட இயல் கோட்பாடு என்பது என்ன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
உரை விவரம் வருமாறு:
இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல; இது திராவிட முன் னேற்றக் கழகம் என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசாக, எட்டுக் கோடி மக்களின் அரசாக, ஒரு கொள்கையின் அரசாக இருக்கிறது; திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. சமூகநீதி, -சமத்துவம், - சமதர்மம், - சகோ தரத்துவம், - மொழி உரிமை,- இன உரிமை, - மாநில சுயாட்சி, ஆகிய கொள் கைகளை உள்ளடக்கிய ‘திராவிடவியல் கோட் பாடு’ என்பதே திராவிட மாடல் சாசனம்.
« பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அய்யன் வள்ளுவர் நெறியும்,
« யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கும் -
« திராவிட இயக்கத்தின் தீரர்களாம் சர். பிட்டி தியாகராயரும், டி.எம். நாய ரும் - நடேசனாரும் காட்டிய வழியும்,
« தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சமதர்மமும்,-
« பேரறிஞர் அண்ணாவின் தமிழ் நாடு உரிமை முழக்கங்களும்
« தமிழினத் தலைவர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் சமூகநீதிச் செயல் பாடுகளும்,
« இனமானப் பேராசிரியரின் மொழி, இன உரிமை வழிகாட்டுதல்களும் - என்னுள் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றன.
இவைதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய சாதனைக்கும், கம்பீரத்துக்கும், வெற்றிக்கும், துணிச்ச லுக்கும் காரணங்கள்! ஓர் அரசு மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கான உதவி களை மட்டும் செய்துவிட்டு, கோட் பாடுகளில் இருந்து விலகிச் சென்று விடக் கூடாது. ஒரு பக்கம் மக்கள் நலன், இன்னொரு பக்கம் கொள்கை உரம். இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக இரண்டாண்டுகளை நாம் நிறைவு செய்யப்போகிறோம்.
இது இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது, என்னுடைய பெருமை மட்டுமல்ல; இந்த அமைச்சரவையின் பெருமை! ஏன், எங்களோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் கூட்டணிக் கட்சி களுடைய பெருமை! இன்னும் சொல் லப்போனால், நாங்கள் கவனிக்கத் தவறும் இடங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக் கும் உண்டு. ஆனால், அந்தக் கடமையிலிருந்து தவறி, என்ன நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் என் பதைப்பற்றி பேரவைத் தலைவர் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் எனக்கும் வேதனையாக இருக்கிறது. இருந்தாலும், அவர் களுக்கும் என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த அவை பல ஆரோக்கியமான விவாதங்களைக் கண்டிருக்கிறது. அதே போன்ற ஆரோக்கியமான விவாத மாகவே உங்கள் அனைவரது உரை களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மக்களுக் காகத்தான் பேசுகிறீர்கள் என்று எடுத் துக் கொள்பவனாக, ஏற்றுக் கொள்ப வனாக நான் இருக்கிறேன். ஆசிரியராய் இருந்து இந்த அவைக்கு தலைமை ஆசிரியராக மட்டுமல்ல, சட்டமன்ற நெறிமுறைகளுக்கு ஆசானாகவும் திகழ்ந்து வரும் பேரவைத் தலைவரான தங்களுக்கும் எனது நன்றியைத் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 12 பேர் பேசி இருக்கிறார்கள். பாராட்டி பேசி இருந் தாலும், விமர்சித்துப் பேசி இருந்தாலும் இரண்டு தரப்புக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில காவலர்களின் செயல்பாடுகள் குறித்து இங்கே விமர்சனங்கள் வைக்கப் பட்டன.
அறிஞர் அண்ணா குறிப்பிட்ட சகிப்புத்தன்மை...
இதுபற்றி பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதை, இதே அவையில் பேசி யதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். "எந்த சமுதாயத்தில் இருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப்படு கிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக் கண்ணாடியாக அந்தப் படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் விலகி இருப்பது இல்லை.
போலீஸ் படை நன்றாக நேர்த் தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதேபோல் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறு இழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறைபாட்டையே அவை காட்டு கின்றன. தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகின்ற இடங்களில் எல்லாம் இருந்தாக வேண்டியிருக்கிறது.
சகல விதத்திலும் சகிப்புத் தன் மையோடு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்ற பயிற்சிக்கு ஒப்ப, கடமை உணர்ச்சி மிக்கவர்களாக நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது" என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட் டார்கள், அப்படித்தான் காவல் துறையினர் நடந்து வருகிறார்கள்.
அவர்களது செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்ல மாட் டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டனவே தவிர, கண்டும் காணாமல் விடப்படவில்லை. சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பி விட்டார் என்றோ, குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றோ, குற்ற வாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல் லுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதி யாக நான் இருக்கிறேன். எந்தக் குற்ற வாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந் தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாகக் கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனைத் திருத்திக் கொள்ளும் பண்பை காவல் துறையினர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
No comments:
Post a Comment