காவல்துறையில் பணியாற்றிய, காலந்தொட்டு இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவரும், ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியவரும், மாவட் டக் கழகத் துணைத் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந் தொண் டர் மானமிகு இரா. கோவிந்தசாமி (வயது 98) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (8.4.2023) முற்பகல் 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது மறைவு அவர்தம் குடும்பத்திற்கு மட்டுமல்ல; கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
கருஞ்சட்டைத் தொண்டராகக் கடைசி மூச்சு அடங்கும் வரை வாழ்ந்து காட்டிய முதுபெரும் பெரியார் தொண்டருக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், மகன்கள் தமிழ்ச்செல்வன், இரவி ஆகியோருக்கும், கழகத் தோழர்களுக் கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.
தொடர்புக்கு: மகன் கோ. இரவி, செல்பேசி: 9380292500
No comments:
Post a Comment