பாலாபிஷேகமாம்! வெட்கக் கேடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

பாலாபிஷேகமாம்! வெட்கக் கேடு!

பழனி முருகனுக்கு பாலாபிஷேகம் - சாமி மலை முருகனுக்குப் பாலாபிஷேகம் - பெண்கள் பால்குடம் சுமந்து சென்று சாமிக்குப் பாலாபிஷேகம் - என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பச்சிளங் குழந்தைகள் பாலுக்கு அழுகை யில் குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்பதுண்டு.

பால் ஒரு சத்துணவு - சத்துக் குறைவால் நோய்க்கு ஆளாகும் மக்கள் இங்கு அதிகம்! இந்த நிலையில் என்னதான் பக்தி முற்றி யிருந்தாலும் கருங்கல் சிலைகளுக்கும், செம் பொன் சிலைகளுக்கும் பக்தி என்ற பெயரால் பாலாபிஷேகம் செய்வது ஏற்கத் தகுந்தது தானா?

பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு என்று சென்னை அண்ணா சாலையில் டாம்டாம் அடித்து சவால் விட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீமணி அவர்கள்.

இவற்றையெல்லாம் எடுத்துக் கூற திரா விடர் கழகத்தை விட்டால் வேறு நாதி உண்டா?

மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதி மட்டும் பகுத்தறிவோடு, மனிதாபி மானக் கண்ணோட்டத்தோடு   நீதிமன்றத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

பாலாபிஷேகத்துக்கு பயன்படுத்தும் பால் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பலரின் பசியை போக்கலாம்: நீதிபதிகள் கருத்து

 பாலாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும் பால் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பலரது பசியை போக்கலாம் என்று உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்துரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந் தவன். எங்கள் ஊரில் உள்ள பகவதி, மாரியம்மன், இளையாண்டி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில், தாழ்த்தப்பட்ட வர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. இத னால், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆடி மாதத் திருவிழாவை யொட்டி வருகிற 27.4.2013 அன்று பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று கோவிலுக்குள் உள்ள அம்மன் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளோம். அவ்வாறு செல்லும் போது எங்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பாலாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு இந்து அறநிலையத்துறை அதிகாரி களுக்கு மனு கொடுத்தோம். அவர்கள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

எனவே, எங்களை கோவிலுக்குள் அனும தித்து பாலாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பலரின் பசியை போக்கலாம்

இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் பூமிராஜன், கண்ணப்பன் ஆகியோர் ஆஜ ராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதி பதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:

Òநமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான உணவு, தங்கும் இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளம் குழந்தைகள் பலர், பால் போன்ற சத்தான உணவுகள் கிடைக்காமல் உள்ளனர். பால் ஓர் அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதை மனுதாரரும், அவருடைய கிராமத்தினரும் நன்கு அறிவர். இதுபோன்ற அத்தியாவசிய உணவுப்பொருளை இந்தியா வில் உள்ள ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற வர்களுக்கு வழங்கி அவர்களது பசியைப் போக்கலாம் என்பதை மனுதாரர் அறிய வேண்டும். மனுதாரர் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக் கையை இந்து அறநிலையத்துறை அதி காரிகள் பரிசீலிக்க வேண்டும்.Ó

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

(மாலைமலர் - 26.2.2014)

இப்படியும்  சில நீதிபதிகள் இருந்திருக் கிறார்களே; இப்பொழுதோ பகுத்தறிவாளர் களைக் கேலி செய்யும் பிரகஸ்பதி நீதிபதி களும் இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment