புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்து நிற்கிறோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்து நிற்கிறோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


சென்னை, ஏப்.30 "புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ் நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளை (29.4.2023) முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண் டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமி ழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்!" எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதி தாசனின் பிறந்தநாள்! துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக் கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்!" இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

இது பிஜேபி மாடல்!

நிலத்தை இலவசமாக எழுதித் தரும்படி அச்சுறுத்தல் பா.ஜ.க. மாநில நிர்வாகி வீட்டிலிருந்து வெடிபொருள்கள் பறிமுதல்

கும்பகோணம்,ஏப்.30- கும்பகோணம் அருகே பாஜக மாநில நிர்வாகி வீட்டில் வெடிபொருள்கள் மற்றும் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

கும்பகோணம் அருகே சாக்கோட்டையைச் சேர்ந்த மாதவன் மகன் கார்த்திகேயன். இவர் பாஜக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலச் செயலராக உள்ளார். இவர் அண்மையில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை இலவசமாக எழுதித் தர வேண்டும் என நிலத்தின் உரிமையாளரிடம் கேட்டு அச்சுறுத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு,  அதன்பேரில், திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒய். ஜாபர் சித்திக், காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி உள்ளிட்டோர் கார்த்திகேயன் வீட்டில் கடந்த 26.4.2023 அன்று விசாரணை நடத்தச் சென்றனர். அப்போது, கார்த்திகேயன் தப்பியோடிவிட்டார்.

கார்த்திகேயன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிபொருள்கள், பட்டாக்கத்தி, கையெழுத்திடப்பட்ட வெற்றுப் பத்திரங்கள் உள்ளிட்ட  ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கு நீண்ட காலம் வராத மாணவர்கள் பட்டியல் தயாரிக்க கல்வித்துறை முயற்சி

சென்னை, ஏப்.30 2022-2023-ஆம் கல்வியாண் டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் இந்த பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவ்வளவு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாதது ஏன்? காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் பேசப்பட்டது. கல்வித்துறை இதில் தீவிரம் காட்டிய நிலையில், அதில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் கல்வித்துறைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடாது. அதில் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்ட கல்வித்துறை இப்போதே அதற்கான முயற்சியில் களம் இறங்கி இருக்கிறது. அதன்படி, நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் விவரங்களை பள்ளிகளிடம் இருந்து பெற்று வருகிற மே 2ஆம் தேதிக்குள்  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிக்கல்வித்துறை ஆணை யர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment