வல்லம், ஏப்.14-- சமூகப் பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அவ்வை சமூக சேவை நிறுவனம் இணைந்து காரைக்கால் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெ ழுத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மணிவண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர், அவ்வை சமூக சேவை நிறுவனம் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் குடிப் பழக்கம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட் டிலிருந்து இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய சிவக்குமார், சமூகப்பணித்துறை தலைவர் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து உழைக்க வேண்டும் என்றார். மேலும் சங்கரி, தலைவர் குழந்தைகள் நலக்குழுமம், காரைக்கால், கருத்துரை வழங்கினார். இவ்விழாவில் ராஜேஸ்வரி ஒருங்கிணைப் பாளர், காந்தஜி வாழ்த்துரை வழங்கினார். இதில் 60 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியானது, உதவி பேராசிரியர் சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் முனைவர் ஞானராஜ் ஆலோசனைப்படி நடைபெற்றது. சமூகப் பணித்துறை 2ஆம் ஆண்டு மாணவி திவ்யா ஒருங்கிணைத்து நடத்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment