”1729 முதல் முப்பதாண்டுக்காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை மார்த்தாண்ட வர்ம மகாராஜா ஆண்டு வந்தார். முஸ்லிம்களின் படையெடுப்பு ஆரம்பமானதும் பிராமண மதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர ஆரம்பித்தது.
குறு நில மன்னர்களையெல்லாம் வென்று நாட்டைக் கீழ்ப்படுத்திய மார்த்தாண்ட வர்மா தன்னுடைய குடிமக்களை ஆள்வதில் ஈவிரக்கமின்றி செயல்படும் சர்வாதிகாரியாக இருந்தார். பிராமணர்களுக்காக ஏராளமான பணத்தைச் செலவிட்டு அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டுத் தான் அவர் ஆட்சி புரிந்தார். கைகட்டி வாய் பொத்தியவாறு நாட்டைப் பிராமணர்களுக்கு காணிக்கை செலுத்திய மகாராஜா மூன்று காரியங்களைச் செய்தார்.
முதலாவதாக, நாட்டை பத்மனாப ஸ்வாமிக்குக் காணிக்கையாக்கி அந்தக் கடவுளின் தாசனாக மாறினார். இரண்டாவதாக, நாள்தோறும் பிராமணர் களுக்கு உணவளிப் பதற்காக நாடெங்கிலும் ‘ஊட்டுப்புரைகள்’ எனப் படும் சோறூட்டு மனை களை நிறுவினார்.
மூன்றாவதாக, பிரா மணர்களை மகிழ்விக்க ஆறாண்டுகளுக்கு ஒரு முறை ஏராளமான பணத்தைச் செலவிட்டு ‘முறைஜெபம்’ என்ற உற்சவத்தை மேற்கொண்டார்.
போர்க்காலத்தில் கோவில்களை அழித்ததற்கான பிராயச்சித்தமாக இதை மேற்கொண்டார். ஆனால் உண்மையில் கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை.
பொதுச்சொத்தைச் செலவிட்டுப் பிராமணர்களைத் தீனி போட்டு வளர்க்க ஒரு சாக்காக இவ்வாறு வதந்தியைப் பரப்பினர்.”
(- தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் எழுதிய 'இந்து மதக் கொடுங்கோன்மை வரலாறு' நூலிலிருந்து...)
No comments:
Post a Comment