புதிய கரோனா வைரஸ் வீரியம் அற்றது; பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

புதிய கரோனா வைரஸ் வீரியம் அற்றது; பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப்.11- அரசு மருத்துவமனை களில் 2 நாள் கரோனா சிகிச்சை ஒத்திகை தொடங்கியது. புதிய கரோனா வைரஸ் வீரியம் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிக ரித்து வருவதால், கரோனா தொற்று சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த இரண்டு நாள் ஒத்திகை தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்து வமனைகளில் நேற்று  (10.4.2023) தொடங்கியது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த ஒத்திகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கரோனா சிகிச்சை தொடர்பான மாதிரி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு, மருத்துவ பணியாளர்கள், பரிசோதனைகள், சிகிச்சைக்கு தேவை யான வசதிகள், மாத்திரை மருந்து கையிருப்பு, முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடை ஆகியவற்றின் கையிருப்பு, அவசர ஊர்திகளின் எண்ணிக்கை போன்றவை இந்த பயிற்சியின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு இருப்பினை உறுதி செய்யும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. 64,281 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள் ளன. ஆக்சிஜன் வசதிகளும் தேவையான அளவு உள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை 342 இடங்களில் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் தினமும் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். தற்போது கரோனா தொற்று குழு பாதிப்புகள் இல்லை. தனிநபருக்கான பாதிப்புகள் மட்டுமே உள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருந்துகளை எடுத்துக் கொள்வதும், வீடுகளில் தனிமைபடுத்திக்கொள்வதும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற னர். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு மிகப் பெரிய அளவில் வீரியமான தாக்குதலாக இல்லை. அதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கும் தேவை ஏற்படவில்லை. ஒமைக்ரானின் உருமாற்றமான இன் னொரு வகையிலான பாதிப்பு இந்தியா முழுமைக்கும் தற்போது பரவிக்கொண் டிருக்கிறது.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்

தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக் கப்படும். அண்மையில் இறந்த மூன்று பேரும் கரோனாவால் இறக்கவில்லை. இணைநோய் பாதிப்புகளால் இறந்துள் ளனர்.

அதேபோல், தமிழ்நாட்டில் இன்பு ளுயன்சா காய்ச்சல் தற்போது முற்றிலு மாக இல்லாத நிலை தொடர்கிறது. ஆனாலும், தமிழ்நாடு மருந்துவ சேவை கழகத்தின் மூலம் 5,500 தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment