பாலியல் தொந்தரவு: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

பாலியல் தொந்தரவு: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை ஏப். 14- கலாக்ஷேத்ரா வில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் விசா ரணை மேற் கொண்டனர். 

சென்னை திருவான்மியூ ரில் செயல்பட்டு வரும் கலா ஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவ தாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அடையாறு காவல் துறையினர், பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, மாதவரத்தில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை காவல் துறையினர் கைது செய்தனர். 6 வாரங்களுக்குள்... இந் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப் படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது. 

இதுகுறித்த விசாரணை அறிக்கையை 6 வாரங்களுக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணைய புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டதைய டுத்து, ஆணைய எஸ்.பி. மகேஸ்வரன் தலை மையிலான காவல் அதிகாரி கள் கலாக்ஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச் சந்திரன், துணை இயக் குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் உள்ளிட்ட 6 பேரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந் நிலையில் தேர்வு முடிவடைந்த நிலை யில் மாணவிகள், ஆசிரியர்கள் என 30க்கும் மேற்பட்டோ ரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை அறிக் கையை விரைந்து தாக் கல் செய்ய முடிவு செய்திருப்ப தாகவும் ஆணைய வட்டா ரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment