சென்னை ஏப். 14 சென்னை அய்அய்டி-யில் முனைவர் பட்டம் படித்துவந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அய்அய்டி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார், வேளச்சேரியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில், சில நாள்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “என்னை மன்னித்து விடுங்கள், இத்துடன் எனது வாழ்வை முடித்துக் கொள்கிறேன்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதி விட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத் தியது.
மாணவர் சச்சின்குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் அகிஷ் குமார் அளித்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள மாணவர்கள், அதனைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல் வதாகவும் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், அய்அய்டி வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத் திய அய்அய்டி இயக்குநர் காமகோடி, இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
No comments:
Post a Comment