அன்று, “பிராமணன் வேதம் ஓதுகையில் சூத்திரன் அருகே இருக்கக் கூடாது”.
இன்று, திருமணங்களில் வேத மந்திரம் ஓதும்போது அவன் குறிப் பிடும் சூத்திரர்கள் கூடி இருந்து கேட்கிறார்களே!
அன்று, அருகே வராதே! எட்டி நில்! பார்த்தாலே தீட்டு என்று சட் டம் செய்து, நடைமுறைப்படுத்தி, ஆணவத்தோடு பார்ப்பனர்கள் உலா வந்து உலவிய நாட்டில் இன்று அரசே, “தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனி தத் தன்மையற்ற செயல்” என்று பாடப் புத்தகங்களில் அச்சிட்டு இளைய தலைமுறைகளைத் தெரிந்து கொண்டு வேகங் கொள் ளச் செய்துள்ளதே!
பெண்கள், உணர்வற்ற மரக் கட்டைகள் என்ற தன்மையில் வைத்திருந்த வைதீகத்தின் கண் கள் பிதுங்கிடுமாறு, பெண்களும் படிக்கலாம்; எல்லாத் தொழில் களையும் செய்யலாம்; ஆட்சி அதிகாரத்தில் அமரலாம் என்ற நிலையை உருவாக்கிச் சொத்துக் கும் உரிமையுடையோராய் ஆக்கி இருக்கிறதே!
அக்கிரகாரத்தில் பொட்டிட்டு, பூச்சூடி, பொது நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்து கெள்ளும் தைரியத்தை உருவாக்கியிருக்கி றதே! இவையெல்லாம் கறுஞ்சட்டை செய்த சமூக மாற்றங்களல் லவா! மாறுகிறதே சமூகம், மாறாது என்று சனாதனத்தால் தடுத் தோமே, மாறும் என்று கறுஞ்சட்டை மாற்றுகிறதே என்ற அச்சம் அந்துமணிக் கூட்டத்துக்கு.
கறுப்புச் சட்டையை மாற்றி னால் கொஞ்சம் வேகம் குறை யாதா என்று நினைக்கிறது ‘தின மலர்’ அந்துமணி அய்யர் கூட்டம். சனாதனச் சிறுகூட்டம் பின் செல் லும் அறியாத் தமிழரை மாற்றிவிட்டால் எல்லாம் மனிதர்களின் கூட்டமாகி விடும். எவ்வளவு கதறி னாலும் கறுஞ்சட்டை கழன்றிடாது. கழற்றிடும் ஆரியத் தோலை.
No comments:
Post a Comment