செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 21, 2023

செய்திச் சுருக்கம்

நலவாழ்வு...

ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 450 நகர்புற நல வாழ்வு மய்யங்கள் திறந்து வைக் கப்பட இருக்கிறது என சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

அனுமதி

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சி.பி.சி. அய்.டி. காவல் துறையினருக்கு அனுமதி அளித்து புதுக் கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

‘கியூஆர்' கோடு

அனைத்து தலைவர்களின் சிலைகளிலும் அவர் களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், ‘கியூஆர்' கோடு பொருத்தப்படும் என்று சட்டமன்றத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்.

குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்பாடுகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டு வருவதாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார்.

தொழில்நுட்பம்

அரசு பணியாளர் தேர்வு, பணித்திறன் மேம்பாடு மற்றும் பணியாளர் மேலாண்மை குறித்த அறிக்கை வெளியிடப்படும். இதன் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுடபம் அறிமுகப்படுத்தப்படும் என நிதி மற்றும் பணியாளர் மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தகவல்.

வரி ஏய்ப்பு

2022-2023 நிதியாண்டில் ரூ.1.01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் ரூ.21,00 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றும் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தகவல்.

நடவடிக்கை

சூடான் நாட்டில், உள்நாட்டுப் போர் தீவிரம டைந்து வருகிறது. அந்த நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தண்டனை

17 வயதான மன வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிரி யாருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு.

உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங் களுக்குள் உணவுப் பங்கீட்டு அட்டை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.


No comments:

Post a Comment