புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
புதுச்சேரி, ஏப். 30- புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் வைக்கம் போராட்டம் நூற் றாண்டு விழாவும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 28.4.2023 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சாரம் அவ்வை திடலில் துரை தலைமையில், அன்பு பசுபதி முன்னிலையில் நடைபெற்றது.
முகேஷ் வரவேற்புரை ஆற்றி னார். தோழர் தீனா தொடக்க உரை ஆற்றினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்தினை தோழர் பிரவீனா திறந்து வைத்தார். திரா விடர் கழக துணை தலைவராக இருந்து மறைந்த தோழர் கண்ண னின் படத்தினை தோழர் பொற் செல்வி திறந்து வைத்தார். நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் வைக்கம் நூற்றாண்டு விழாவின் வீரம் செறிந்த கடந்த கால நிகழ்வுகள் குறித்து, தந்தை பெரியாரின் சிறந்த பங்களிப்பு பற்றியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உடைய பகுத்தறிவு சுயமரியாதை சமதர்ம பாடல்களை விளக்கியும், "திராவிட மாடல்" என்பதன் சிறப்புகளை எடுத்துரைத்தும் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் புதுச்சேரி மாநில கழ கத் தலைவர் சிவ வீரமணி, மண்டல கழகத் தலைவர் அன்பரசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நகராட்சி அமைப் பாளர் ஆறுமுகம், ஆதிநாராய ணன், இளங்கோவன், சிவராசன், ராசா, கிருஷ்ணசாமி, குப்புசாமி, நடராஜன், முத்துவேல், அறிவழ கன், சடகோபன், குமார், தாமோ தரன், ராமசேகர், மறுவாய் சேகர், வழக்குரைஞர் திராவிட அரசு, சிங் கப்பூர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment