திருப்பதி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காணவில்லை - ஏழுமலையான் விசாரிக்கப்படுவாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

திருப்பதி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காணவில்லை - ஏழுமலையான் விசாரிக்கப்படுவாரா?

திருப்பதி, ஏப். 5- கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில் வசித்து வருபவர் பால எழிலரசன், 38. லேத்து பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தீபா, 32, தாய் சாந்தா, 65, சகோதரி இந்திரா, 45, 12 வயது மகன், 10 வயது மகள் ஆகியோரு டன், இம்மாதம், 1ஆம் தேதி திருப்பதி புறப்பட்டு சென்றார். அதன்பின், ஆறு பேரும் வீடு திரும்பவில்லை. அவர்களின் அலைபேசிகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் விசாரித்தும் அவர்களை பற்றிய தகவல் ஏதும் கிடைக்க பெறவில்லை. இதைய டுத்து, ஏ.என்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பால எழிலரசனின் உறவி னரான பார்த்திபன் அளித்த புகாரின்படி, கவரைப்பேட்டை காவல் துறையினர் ஆறு பேரையும் தேடி வருகின்றனர். ஒரே குடும் பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காணாமல் போன சம்பவம், கவரைப்பேட்டை பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment