20.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
*ஆங்கில வழிக்கல்வியில் தேர்வு நடத்தினாலும், மாணவர்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் விடை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக் கழகங் களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் களுக்கும் சலுகைகள், முக்கியமாக இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதற்காக ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற முதலமைச்சரின் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* கோவிட், 2024 மக்களவை தேர்தல் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் மூன்று ஆண்டுகள் தாமதமாகும் என தகவல்.
* இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி ஜார்க்கண்ட் அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக் காமல், சட்டமன்றத் தலைவருக்கு திருப்பி அனுப்பி யுள்ளார்.
தி இந்து
* ஜாதிக் கணக்கெடுப்பு, தார்மீக ரீதியில் குறைபாடுடை யதாக இருந்தாலும், ஒதுக்கீடு நன்மைகளை இலக்காகக் கொள்ள உதவும் என்கிறது தலையங்க செய்தி.
தி டெலிகிராப்
* 2019 புல்வாமா தாக்குதல் குறித்து நரேந்திர மோடி அரசு பதில் அளிக்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை.
* யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 10,900 காவல்துறை என்கவுன்டர்களில் 183 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment