சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, ஏப். 3- - சட்டப்பேரவையில் 31.3.2023 அன்று கடலூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் கோ.அய்யப்பன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “கட லூர் தொகுதியில் பெரிய தொழிற் சாலைகள் வருவ தற்கு வாய்ப்பிருக் கிறது” என்று குறிப் பிட்டார்.
இதுகுறித்து சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
கோ.அய்யப்பன்: (அ) கடலூர் தொகு தியில் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா? (ஆ) ஆம் எனில், எப் போது?
அமைச்சர் தங்கம் தென்னரசு: கடலூர் தொகுதியில் தொழிற்சாலை அமைக் கும் திட்டம் ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை தங்கள் மூலமாக உறுப்பினர் அவர்க ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோ.அய்யப்பன்: சிப்காட் தொழிற் சாலை 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டாலும், கலைஞர் அவர்கள் முதல் வராக 1996இல் பொறுப்பேற்ற காலத் தில், சிப்காட் தொழிற்சாலைக்கு நேரடி யாக வருகை செய்து, ஜிகிழிதிணிஞி நிறுவனங் களையெல்லாம் ஆய்வு செய்து, சிப் காட் விரிவாக்கத்தை செய்து தந்தார் கள். தளபதியார் அவர்கள், 2006-2011இல் கடலூர் சிப்காட் வளாகத்திற்கு வருகை தந்து, TANFED போன்ற நிறுவ னத்தையெல்லாம் அங்கே ஆரம்பித்து வைத்து பெருமை சேர்த்தார்கள். அமைச்சர் அவர்களே, ஆங்கிலேயர் காலத்திலிருந்து கடலூர் தலைநகரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கடலூர் இப்பொழுதும் தலைநகரமாக இருந்தா லும்கூட, அங்கு ஒரு சிறு தொழிற்சாலை கூட இல்லை. தாங்கள் சொல்கின்ற Chemplast உள்ளிட்ட மற்ற தொழிற்சாலைகளெல்லாம் குறிஞ்சிப் பாடி தொகுதிக்கு சென்றுவிட்டது. எங்களுடைய கடலூர் தொகுதியில் ஒரு சிறு தொழிற்சாலைகூட இல்லாத காரணத்தால், கடலூர் தலைநகரத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொள்ளும் வித மாக, அமைச்சர் அவர்கள் முதல்வர் அவர்களுடன் கலந்து பேசி, அருள் கூர்ந்து தயவுகூர்ந்து கடலூருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், ஒரு ஆயிரம் பேராவது பணி செய்யக்கூடிய வகையில் ஒரு சிறிய தொழிற்சாலை யையாவது அமைத்துக் கொடுக்குமாறு அமைச்சர் அவர்களிடம் அன்போடு கேட்டு அமைகிறேன்.
முதலீட்டு ஊக்குவிப்புத் துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு: உறுப் பினர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, 1984ஆம் ஆண்டு துவங்கி, 1992, 1996 என மூன்று கட்டங்களில் கடலூரில் சிப்காட் மூலமாக தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கான நிலமனைகள் ஒப் படைக்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 78 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டு, 50 நிறுவனங்கள் தற்போது தங்களுடைய பணிகளைத் துவங்கியிருக்கின்றன. உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, அது ஏற்கெ னவே கடலூரில்தான் இருந்தது. இன்னும்கூட சொல்லப்போனால், கடலூர் மாநகரத்திற்கும், சிதம்பரம் போகிற வழியில் கடலூரிலி ருந்து புவனகிரிக்கு வரக் கூடிய வழியில் தொடர்ச் சியாக இந்தத் தொழிற் சாலைகள் இருக்கின்றன. Haldia company ஆக அது ஏற் கெனவே கடலூர் தொகுதியில்தான் இருந்தது. தொகுதி மாறியதற் குப் பிறகு, தொகுதி சீரமைப்பு வரையறைக்குப் பிறகு, அது நம்முடைய வேளாண்மை துறை அமைச்சர் அவர்களின் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அது வந்திருக்கிறதே யொழிய இயற்கை யாக கடலூரில்தான் இருந்தது. எனவே, அந்தப் பகுதியில் அமைகின்ற எந்தத் தொழிற்சாலையாக இருந்தாலும், அது கடலூர், குறிஞ்சிப்பாடியாக இருந்தா லும், ஒட்டு மொத்த கடலூர் மாவட்டத் திற்கும் அந்தத் தொழிற்சாலைகள் பயன் படுத்தக் கூடிய அளவிலே இருக் கிறது. நம்முடைய தொழில் துறையைப் பொறுத்த மட்டில், புதிதாக துறையின் மூலமாக தொழிற்சாலைகள் துவங்குவ தில்லை. யாரேனும் தொழில் முதலீட் டாளர்கள் முன்வருவார்கள் என்று சொன்னால், அவர்களை ஊக்குவிப்பு செய்து, அவர்களுக்கான சிறந்த சலுகை களை வழங்கி, தொழில்களை தொடங் குவதற்கான எல்லாவிதமான ஆதர வையும் தொழில்துறை அளிக்கும். எனவேதான் இந்தத் துறையை, தொழி துறை என்பதை மாற்றி தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை என்று முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கி றார்கள். இங்கே அவர் குறிப்பிடு வதைப்போல பெரிய தொழில் நிறு வனங்கள் Haldia Petrochemicals Limited- - ஏற்கெனவே அங்கே இருக்கக்கூடிய Nagarjuna Oil Corïporation Limited நிறுவனத்தை NCLT மூலமாக அவர்கள் கையகப்படுத்தியிருக்கிறார் கள். அவர் கள், அங்கே அந்தத் தொழிற் சாலையை அமைப்பதற்கான ஆர்வம் காட்டுகி றார்கள். அதுபோன்ற பெரிய தொழிற் சாலைகள் Aromatics Complex எல்லாம் வருவதாக இருந்தால், உறுப்பி னர் அவர்கள் சொல்வதைப்போல அந்தப் பகுதிக்கான சிறந்த ஒரு தொழிற் சாலை வரக்கூடிய வாய்பு இருக்கிறது.
காகிதத் தொழிற்சாலை
கோ.அய்யப்பன்: கடலூர் தொகுதிக் கென்று அருள்கூர்ந்து அமைச்சர் அவர்கள் தண்ணீர் குறைவாகப் பயன் படும் ‘பூ’ தயாரிக்கும் தொழிற்சாலை, Textile Park, TIDEL Park அல்லது காகிதத் தொழிற்சாலை ஏனென்றால், சவுக்கு மரங்கள், Eucalyptus மரங்கள் எல்லாம் எங்கள் பகுதியில் அதிகமாக பரவலாக விளைகின்றது. ஏதாவது ஒரு சிறு தொழிற்சாலையையாவது கடலூர் தொகுதிக்குத் தந்து உதவிடுமாறு அமைச்சர் அவர்களை கேட்டு அமர் கிறேன் .
அமைச்சர் தங்கம் தென்னரசு: சிறு தொழிற்சாலைகள் அல்ல, பெரிய Petrochemical Complex வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதன் வாயிலாக அங்கே இரசாயன பொருட்கள், polymer பொருட்களையெல்லாம் உற்பத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஏறத்தாழ 78 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மாபெரும் Complex வருகின்றபோது, அவர் சொல்வதைப்போல எல்லா இடங்களிலும் வரும். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அந்தத் தொழிற்சாலை அந்தப் பகுதியிலே வர வேண்டும். பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி அவரும் சொல்லியிருக்கின்றார். எனவே, அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
-இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
No comments:
Post a Comment