பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக சுகாதார தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக சுகாதார தினம்

வல்லம். ஏப்.14- சமூகப் பணித் துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பாக அரியலூர் மாவட்டம் விளாங்குடி பஞ்சாயத்தில் உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் அருட்தந்தை மார்டின், அரியலூர் அனைவரையும் வர வேற்று பேசினார். இந்நிகழ்விற்கு துரை இளவரசன், தலைவர், விளாங்குடி பஞ்சாயத்து அவர்கள் தலைமை வகித்தார்.

அவர் தமது உரையில், உழைக் கும் மக்கள் அனைவரும் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அனைவரும் உடல் நலனில் பாதுகாப்பதில் அக்கவீற செலுத்த வேண்டும்  என்றார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்த் சுகாதார ஆய்வாளர், விளாங்குடி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சரிவிகித உணவு முறையை கையாள வேண் டும் என்றும் நேரம் தவறாமல் சாப்பிடுவதன் மூலமும், நல்ல தூக்கத்தின் மூலமும் பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்றார்.

 மேலும் காயத்திரி, மருத்துவர் அலுவலர் விளாங்குடி அவர்கள் கருத்துரை வழங்கினார். இதில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்சியானது முனைவர் ஞானராஜ், உதவிப் பேராசிரியர், சமூகப் பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அவர் களின் ஆலோசனைப்படி 

தெபோரால், சமூகப் பணித்துறை முதலா மாண்டு ஆண்டு மாணவி ஒருங்கிணைத்து நடத்தி அனை வருக்கும் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment