கருநாடக சட்டமன்றத் தேர்தல் பி.ஜே.பி.யில் குழப்பமோ குழப்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

கருநாடக சட்டமன்றத் தேர்தல் பி.ஜே.பி.யில் குழப்பமோ குழப்பம்!

எம்.எல்.ஏ.க்கள்-எம்.எல்.சி.க்கள் பதவி விலகல்

பெங்களூரு, ஏப். 15- பா.ஜனதா வின் முக்கிய தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கெனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து 12.4.2023 அன்று இன்னொரு மூத்த தலைவர் ஈசுவரப்பாவும் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர்கள் பா.ஜனதாவில் நீடிக் கிறார்கள்.

இந்த நிலையில் ராணி பென்னூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அதிருப்தி அடைந்துள்ள சங்கர் எம்.எல்.சி. தனது பதவியிலிருந்து விலகி யுள்ளார். பெங்களூரு விதான சவுதாவில் மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். ராணி பென்னூர் தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கருநாடக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருப் பவர் லட்சுமண் சவதி எம்.எல்.சி. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் எடியூரப்பா அமைச்சரவை (2019-2021) துணை முதலமைச்ச ராக பணியாற்றினார். 

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியை தழுவிய பிறகும் அவருக்கு முக்கிய பதவியை பா.ஜனதா வழங்கியது. 

எடியூரப்பா கடந்த 2021ஆம் ஆண்டு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில் லட்சு மண் சவதிக்கு இடம் அளிக்கப் படவில்லை.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதானி தொகுதியில் தனக்கு போட்டியிட சீட் வழங்குமாறு லட்சுமண் சவதி கேட்டார். ஒருவேளை வாய்ப்பு வழங்காவிட்டால், கட்சியில் நீடிக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் அதானி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ. வாக உள்ள மகேஷ் குமடள்ளிக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட் டுள்ளது. அவர் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ரமேஷ் ஜார்கிகோளியின் நெருங் கிய ஆதரவாளர்.

அதானியில் தனக்கு டிக்கெட் வழங்காததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய லட்சுமண் சவதி, பா.ஜனதாவில் இருந்து விலகுவ தாக அறிவித்துள்ளார். லட்சுமண் சவதி முன்பு எடியூரப்பா அமைச்ச ரவையில் (2008-2013) அமைச்சராக பணியாற்றியபோது, சட்டசபை கூட்டத்தில் செல்பேசியில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகி யுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மூத்த தலைவரான லட்சுமண் சவதியின் விலகல், வட கருநாட கத்தில் குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவர் விரை வில் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீனவர் நலன் மற்றும் துறைமு கங்கள் துறை அமைச்சராக உள்ள எஸ்.அங்கார், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சுள்ளியா தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியில் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இத னால் கடும் அதிருப்தி அடைந் துள்ள அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் நேர்மைக்கு இடம் இல்லை என்று கூறியுள்ள அவர், இந்த தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டார் என்று சொல்லப் படுகிறது.

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப் பவர் ஜெகதீஷ் ஷெட்டர். முன் னாள் முதலமைச்சரான அவர், எடியூரப்பா அமைச்சரவையில் (2019--21) தொழில்துறை அமைச் சராக பணியாற்றினார்.

பசவராஜ் பொம்மை முதல மைச்சரான பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வில்லை. கருநாடக சட்டசபை தேர்தலையொட்டி தனது தொகு தியில் மீண்டும் போட்டியிடுவ தற்காக அவர் தீவிரமான ஏற்பாடு களை மேற்கொண்டு வந்தார். 

இந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று பா.ஜனதா மேலிடம் கூறியுள்ளது. புதியவர் களுக்கு வழிவிடுமாறு அவரை கட்சி மேலிடம் கேட்டு கொண் டுள்ளது. இதை ஜெகதீஷ் ஷெட் டர் நிராகரித்துவிட்டார். தான் தேர்தலில் தனித்து போட்டியிடு வது உறுதி என்று அறிவித்து உள்ளார்.

இதையடுத்து உப்பள்ளி-தார் வார் மத்திய தொகுதிக்கு வேட்பா ளர் அறிவிப்பை பா.ஜனதா மேலிடம் நிறுத்தி வைத்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு அமைச்சராகவும், சட்டப் பேரவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவருக்கு உப்பள்ளி மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள மாவட்டங் களிலும் செல்வாக்கு உள்ளது. 

அவர் தனித்து போட்டியிட்டால், அது பா.ஜனதாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. 

அதனால் அவரை சமாதானப் படுத்த கட்சி மேலிடம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment