கர்ப்ப காலத்து அருமருந்து - கிராம்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

கர்ப்ப காலத்து அருமருந்து - கிராம்பு!

சத்துக்கள் நிறைந்த கிராம்பு ஒரு நறுமண மருத்துவ மூலிகையாகும். கிராம்பு சிறியதாக இருந்தாலும் இதில் ஈரப்பதம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, தயமின், துத்தநாகம், நியாசின், நார்ப் பொருள், பாஸ்பரஸ், புரதம், போலேட், மினரல், ரிபோ பிளேவின், வைட்டமின் ‘சி’, ‘ஏ’, ‘கே’ போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் மருத்துவக் குணங்கள்.

பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும், கருப்பை யானது சுருங்கி விரிவதற்கும் கிராம்பு பயன் படுகிறது. இடுப்புவலி, மூட்டுவலி, தொடை, நரம்பு வலி, தசைப்பிடிப்பு போன்ற பகுதி களில் கிராம்பு எண்ணெயை தடவலாம்.

*தினமும் 2 கிராம்பை மென்று தின்றால் பித்தம் குறையும். வாய் துர்நாற்றம் அகலும்.

*கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தினால் ஈறு வீக்கம், பல்வலி, வாய் நாற்றம் சரியாகும்.

*கிராம்பு, மிளகு, வெற்றிலையை மென்று, மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

*சுக்கு, கிராம்பை கசாயம் போட்டு மூன்றுவேளை பருகி வந்தால் கை, கால், மூட்டுவலி சரியாகும்.

*கிராம்பு சிறிதளவு உப்பு இவற்றை அரைத்துப் பசும்பாலில் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி வராது. கிராம்புப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தினால் வறட்டு இருமல் நீங்கும்.

*கிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். சளி குறையும்.

*சிறிது அளவு சமையல் உப்புடன் கிராம்பைச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கும்.

*துளசிச்சாறுடன் தேன், கிராம்புத்தூள் சேர்த்துச் சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

*கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட தோல் நோய்கள் மறைந்துபோகும்.

*3 துளி கிராம்பு எண்ணெய், சிறிதளவு தேன், வெள்ளைப்பூண்டுச்சாறு, சேர்த்து படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிட்டால் ஆஸ்துமா கட்டுப்படும். அல்லது 30 மில்லி நீரில் 6 கிராம்புகளை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்தும் குடிக்கலாம்.

No comments:

Post a Comment