வல்லம், ஏப். 21- கடந்த 10 ஆண்டு களாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சென்னை புத்தக சங்கமத்தில் பல்வேறு சிற்றூர் பள்ளிகளுக்கு பல ஆயி ரக்கணக்கான புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வரு கிறது.
அதன் தொடர்ச்சியாக நமது பெரியார் கல்வி நிறுவனங்கள் மாபெரும் புத்தக நன்கொடை வழங்கும் நிகழ்வை கொண்டாட உள்ளோம். இந்த புத்தக நன் கொடை முழுவதும் அரசு பள்ளி நூலகத்திற்கு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் ஒப்ப டைக்க உள்ளோம்.
இதனை முன்னிட்டு பேராசி ரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களால் இயன்ற பொது அறிவியல் புத்தகம், பள்ளி பாட புத்தகங்கள், கதை புத்தகம், போட்டி தேர்வு புத்தகம், புத்த கங்களை நன்கொடையாக வழங் குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
புத்தகக்கொடை
வழங்கும் இடங்கள்
தஞ்சாவூர்
1. பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
2. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
3. பெரியார் சமூக தொடர் கல்வி கல்லூரி
திருவாரூர்
1. பெரியார் படிப்பகம்
வெட்டிக்காடு
1. பெரியார் மெட்ரிகு லேஷன் பள்ளி
திருச்சிராப்பள்ளி
1. பெரியார் கல்வி வளா கம்
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி
பேராசிரியர்கள், ஆசிரியர் கள் மற்றும் பணியாளர்கள் புத்தக நன்கொடை வழங்குவது மட்டுமில்லாமல் தங்களது நண்பர்கள், உறவினர்கள், தங்க ளுக்கு தொடர்புடைய ரோட் டரி சங்கங்கள், தன்ஆர்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், நடைப்பயிற்சி நண்பர்கள், வெளிநாடு வாழ் நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொண்டு புத்தகக் கொடை வழங்குமாறு கேட்டுக் கொள்கி றோம்.
பல்கலைக்கழக துணைவேந் தர் பேரா எஸ்.வேலுச்சாமி உரையாற்றும் போது, யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 - ஆம் தேதியை புத்தக தினமாக அறிவித்தது.
ஷேக்ஸ்பியர், சொவாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கிய வாதிகள் 1616 எப்ரல் 23 - ஆம் தேதி மறைந்தனர்.
இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள இவர்களின் பங்க ளிப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 -ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.
அதன்படி கடந்த 1995 -ஆம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வரு கிறது.
100 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடு கின்றன.
2023க்கான உலக புத்தக தினத்தின் கருப்பொருள் : படி, வளர்ச்சி, உத்வேகம்
இந்த புத்தக தினம் வாசிப்பு மனப்பான்மை தொடர்ந்து செழித்து மகிழ்ச்சியை பரப்பு வதை உறுதி செய்ய எடுக்கப் பட்டது.
மனித குலத்தின் சமூக மற்றும் கலச்சார வளர்ச்சிக்கு உதவிய முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் கணக்கிட முடியாத சாதனை களை அங்கீகரிக்கும் அதே வேளையில் நமது வாழ்வில் புத்தகங்களின் இன்றியமையாத பங்களிப்புகளுக்கு ஒரு புதிய மரியாதையைப் பாதுகாப்பதே குறிக்கோள் என்று. கூறிக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment