நியமனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் ராஜன் தகவல்.
மீட்பு
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.
உத்தரவு
பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பலகலைக்கழக மானிய குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
நடவடிக்கை
நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க சமாதான திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தகவல்.
மாற்றம்
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சி.பி.சி.அய்.டி. காவல்துறை விசார ணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவு.
ஓட்டம்
சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் வருகிற 25ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடக்கிறது.
நடவடிக்கை
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலை விவகாரத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்.
அதிகரிப்பு
‘புதுமைப்பெண்' திட்டத்தால் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தகவல்.
கருத்துக் கேட்பு
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த விவகாரத்தில் மாநிலங்களையும் ஒரு தரப்பாக சேர்த்து அவற்றின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment