ராகுல் காந்தி பதவி பறிப்பு: குமரி அனந்தன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

ராகுல் காந்தி பதவி பறிப்பு: குமரி அனந்தன் பேட்டி


திருச்சி, ஏப். 30- காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று (29.4.2023) திருச்சியில் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது;-திருச்சி தமிழ் சங்கத்தில் நடை பெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகம்.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிடுகிறார். நான் அதில் ஏற்புரை ஆற்றுகிறேன். ராகுல் காந்தியின் பதவியை பறித்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எந்த ஜாதியையும் தெளிவு படுத்தி பேசவில்லை.மோடி என பேசியதற்காக மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்துள் ளனர். 

இது என்னுடைய மனதை கலங்கடிக்க செய்துவிட்டது.நான் 17 முறை நடைப்பயணம் மேற் கொண்டு இருக்கின்றேன். ஆனால் ஒரே நடைப் பயணத்தில் ராகுல் காந்தி அதனை முறியடித்து விட்டார். 

அவரது கருத்துகள் இன் றைக்கு மக்களை சென்றடைந்து வருகிறது. பிரதமராகும் அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. காங்கிரஸ் வளர காமராஜரின் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறிக் கோளுடன் வாழ வேண்டும், கொண்ட குறிக்கோளில் இருந்து இளைஞர்கள் பின்வாங்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment