பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: அறிவியல் இயக்கம் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

குன்னாண்டார்கோவில், ஏப் 11- தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் குன்னான்டார் கோவில் அருகே சூசைப்புடை யான்பட்டி  தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில்  நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வீர முத்து தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் க.ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முன்னதாக "இன்றைய சூழலில் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல்" எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கலந்து கொண்டு பேசும்போது இன்று இருக்கும் பள்ளிக்கல்வி சூழல்கள் மற்றும் சுற்றுச்சூழல் களில் ஏற்படும் அச்சுறுத்தல் கள், கனிம வளங்களைப் பாது காக்க வேண்டியதன் அவசி யங்கள், குறித்தும் அறிவியல் இயக்கம் மக்களிடம் இன்னும் செய்ய வேண்டிய அறிவியல் பரப்பும் பணிகள் குறித்தும் பேசினார். கல்வி அனைவருக் கும் சென்று சேரும் வகையில் வசதிகளை மேம்படுத்த நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மாநில துணைத் தலைவர் மாணிக்கத்தாய் இன் றைய சுற்றுச்சூழல் அச்சுறுத் தல்கள் குறித்தும், மாநில செயற்குழு உறுப்பினர் எல். பிரபாகரன் மக்களுக்கு மருத் துவ வசதிகள் தரமாக கிடைக்க வேண்டியதன் அவசியம் குறித் தும், கல்வி உரிமை சட்டம் போல மருத்துவ உரிமை சட்டம் (Right to Health) நிறை வேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மாநில பொதுக் குழு உறுப்பினர் மணவாளன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து  பேசினார்.

பின்னர் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்து குமார் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் விமலா வரவு செலவு அறிக் கையும் சமர்ப்பித்தனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பொதுத்தேர்வுகளுக்கு வராத 50,000 மாணவர்களின் எதிர் காலத்தை அரசு கருத்தில் கொண்டு மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வும், இத்திட்டத்தில் கந்தர்வக் கோட்டை கரம்பக்குடி ஒன்றி யங்களையும் இணைத்து குடி நீர்,  நீராதாரம் வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் என வும்,

கீரனூர்,  நமுணசமுத்திரம், திருவப்பூர் உள்ளிட்ட இடங் களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் எனவும், கோடைவிடுமுறையில் குழந் தைகள் அறிவியல் திருவிழாக் களை ஒன்றியந்தோறும் சிறப் பாக நடத்துவது எனவும் தொலைக்காட்சிகள் உள் ளிட்ட ஊடகங்களில் பெண்க ளைத் தரக்குறைவாக விளம் பரப்படுத்தும் முறையை அரசு தடை செய்ய வேண்டும் என வும், எரிபொருள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வழங் கப்படும் குடிநீர் அனைவருக்கும் தூய்மையானதாகவும், சுகாதா ரமானதாகவும், தரமாகவும், வழங்கிட தேவையான நீர்த் தேக்கத் தொட்டி கண்காணிப்பு முறைகளை அரசு உறுதிப் படுத்தி பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் எனவும்,

போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை கட் டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

பள்ளிகளில் ஆசிரியர்க ளுக்கு சுதந்திரமான கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெறு வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக மாநில செயலா ளர் பாலகிருஷ்ணன் பொது மக்களோடு செய்ய வேண்டிய மக்கள் பணிகள் குறித்து பேசினார்.

நிறைவாக குன்னாண்டார் கோவில் வட்டார செயலாளர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், கமலம், துரையரசன், பவணம்மாள், கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, கறம்பக் குடி வட்டாரத் தலைவர் வீர பாலன் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் அறிவியல் இயக்க பொதுக்குழு உறுப்பினர்கள் 50 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment