பெரியார் இல்லாவிட்டால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

பெரியார் இல்லாவிட்டால்...

இந்தியாவின் பொது ஆளுநருக்குச் சென்னை மாகாணத்தில் முகவராக (Agent to the Governor -General, Madras) சி.டபிள்யு. இ. காட்டன் எனும் அய்.சி.எஸ். அதிகாரி. அவர் சென்னை அரசாங்கத் தலைமைச் செயலருக்கு 21.04.1924 அன்று எழுதிய மடலில் உள்ள வரிகள்:

 ‘சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால், அது வெகு நாட்களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது” பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்துவிட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: “வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவருடைய தீர்க்கமான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடுமாற்றமுள்ளவர்களைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றியதுடன், எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிரகத்திற்குச் சில நாள்கள் தலைமை ஏற்றார். பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச்சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார். ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் மனதில் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது. எனவே, அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.”

No comments:

Post a Comment