பிரதமர் மோடியிடம் கபில்சிபல் கேள்வி
புதுடில்லி, ஏப். 3- "2024 பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வகுப்புவாத வன்முறைகளைக் கையிலெடுக்கத் தொடங்கி விட்டது. மேற்கு வங்கம், குஜராத்தில் நடந்தவை அதற்கான முன்னோட்டம் தான்" என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக உரு வெடுத்தது. இதில் பாஜகவும் திரிணாமூல் காங்கிர ஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின் றனர். அதேபோல, ராம நவமி கொண்டாட் டத்தின்போது குஜராத், மகா ராட்டிரா போன்ற மாநிலங்களிலும் வன்முறைகள் நிகழ்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கபில் சிபல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில்," 2024-அய் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பாஜகவினருடைய மேஜை யில் வகுப்புவாத வன்முறை, வெறுப்பு பேச்சுக் கள், சிறுபான்மையினரைத் தூண்டிவிடுதல், அமலக் கத்துறை, சிபிஅய், தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகளை குறிவைத்தல் போன் றவை தயாராக இருக்கின்றன.
மேற்கு வங்கம் பற்றி எரிவதும், கருநாடகா, குஜராத்தில் கலவரம் புகைவிடத் தொடங்கி இருப்பதும் அதற்கான முன்னோட்டமே" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கபில் சிபல் இரண்டு முறை ஒன்றிய அமைச் சராக இருந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட் டியிட்டு மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
No comments:
Post a Comment