புதுக்கோட்டை, ஏப். 30- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள குழிப்பிறை பேருந்து நிறுத்த கடை வீதியில் திராவிடர் கழ கத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா, திருமயம் மேனாள் ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா படத்திறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு திரு மயம் ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன் தலைமை வகித்தார்.
மாவட்ட ப.க. ஆசிரி யர் அணி அமைப்பாளர் மு.தேவகுமார் அனைவ ரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு. அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், திமுக மாவட்ட பொறியாளர் அணியைச் சேர்ந்த மு. ஆனந்தக்குமார்,
ஊராட் சிச் செயலாளர் குழ.தேவ ராசன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் திலீபன் ராசா, ஆகியோர் முன் னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் தஞ்சை.இரா.பெரியார்செல்வன் வைக் கம் போராட்ட வரலாறு குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் சிறப்புரையாற் றினார்.
நிகழ்வில் பொன்னம ராவதி ஒன்றியச் செயலா ளர் வீ.மாவலி, மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த வீர.வசந்தா, ஆறு.தமிழன்பு, இறையூர் மாரியம்மாள், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.யோகராஜ், ஆறு. பாலச்சந்தர், மாவட்ட இளைஞரணித் தலைவர் க.ஆறுமுகம், இளைஞ ரணிச் செயலாளர் ஆ. மனோகரன், ம.மு.கண் ணன் உள்ளிட்ட தோழர் கள் கலந்து கொண்டனர்.
திருமயம் ஒன்றியச் செய லாளர் க.மாரியப் பன் நன்றி கூறினார்.
திருமயம் ஒன்றிய திராவிடர் கழ கம் இந்த ஏற்பாட்டைச் செய்திருந் தது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment