சென்னை, ஏப். 24- தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக் கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக ஏப். 24, 25, 26ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். ஏப். 27ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித் துள்ளார்.
9 நகரங்களில் வெயில் சதம்:
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருச்சி யில் 104 டிகிரி, மதுரை யில் 103, கரூர் பரமத்தி, நாமக்கல்லில் 102, திருத் தணியில் 101, சேலம், ஈரோடு, வேலூர், தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment