இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழக விருது பெற்ற பெரியார் பாலிடெக்னிக் முதல்வரை நிறுவனத் தலைவர் பாராட்டினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழக விருது பெற்ற பெரியார் பாலிடெக்னிக் முதல்வரை நிறுவனத் தலைவர் பாராட்டினார்

வல்லம், ஏப்.18 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி,வீரமணி அவர்கள் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக சிறந்த அத்தியாய தலைவர் விருது (ISTE BEST CHAPTER CHAIRMAN AWARD-2022) பெற்ற பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரை பாராட்டினார்.

இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வாயிலாக தொழில்நுட்பக் கட்டுரைகள் வாசித்தளித்தல், திட்ட மாதிரிகள் தயாரித்து பல்வேறு பாலி டெக்னிக் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கண்காட்சியில் கலந்து கொள்ளுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக தொழில்நுட்ப ஆலோசனைகளை அளித்து மாண வர்களை சிறப்பாக வழிநடத்தும் பாலி டெக்னிக் முதல்வர்களை தேர்ந்தெ டுத்து ஒவ்வொரு ஆண்டும் தொழில் நுட்பக் கல்விக் கழக சிறந்த அத்தியாய தலைவர் விருது வழங்கப்படுகிறது.

25.03.2023 அன்று சென்னை, ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல் லூரியில்நடைபெற்ற பரிசளிப்பு விழா வில் 2022ஆம் ஆண்டிற்கான இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக சிறந்த அத்தியாய தலைவர் விருது (ISTE BEST CHAPTER CHAIRMAN AWARD - 2022)  பெற்ற வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகாவை   இப்பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி னார். இந்நிகழ்வில் துணை முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment