எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மாநில அரசு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மாநில அரசு அனுமதி

சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

கடந்த 2017 முதல் 2021 வரை  தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் என 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் ரூ. 4,080 கோடியில் அமைக்கப்பட்டன. அதில்  முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி கட்டுமான ஒப்பந்தப்புள்ளிகளில் முறை கேடு செய்ததாக புகார் எழுந்தது. முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து  லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை  நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. எனினும் இது விசாரணைக்கு மட்டுமான அனுமதிதான் என்றும் தேவைப்பட்டால் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment