தகவல் தொடர்பை மேலும் எளிதாக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

தகவல் தொடர்பை மேலும் எளிதாக்கும் வாட்ஸ் அப் நிறுவனம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்-அய் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, பலரும் எதிர் பார்த்த வாட்ஸ்அப் புதிய முறை ஏற்றத்தை (update)  வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு அலைபேசியில் பயன்படுத்தும் படி அப்டேட் வெளியிட் டுள்ளது. 

இந்த அம்சம் ஏற்கெனவே வாட்ஸ்அப் வெப் ( டெஸ்க்டாப்) அம்சத்தில் இருந்தாலும் தற்போது அலைபேசிகளுக்கும் வழங்கப்பட் டுள்ளது. வாட்ஸ்அப் கணக்கு இணைக்கப் பட்ட 4 சாதனங்களிலும் வாட்ஸ்அப் தனித் தனியாக இயங்கும். முதன்மை சாதனம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மற்ற சாதனங்களில் பயன்படுத்தலாம். ஆனால், 15 நாள்களுக்கு மேல் முதன்மை சாதனம் செயல் படாமல் இருந்தால் மற்ற சாதனங்களில் வாட்ஸ்அப் தானாகவே முடிந்து (Log out)  மூடிவிடும். நான்கு சாதனங்கள் என்பது 4 அலை பேசிகளாக இருக்கலாம் அல்லது லேப்டாப், கணினியைக்கூட பயன் படுத்தலாம்.

வாட்ஸ்அப் அக்கவுண்டை எவ்வாறு லிங்க் (இணைப்பு) செய்வது?

ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்ற சாதனங்களில் லிங்க (இணைப்பு) செய்ய, இரண்டாம் தர(secondary)அலைபேசியில் வாட்ஸ்அப் மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும். இப்போது முதன்மை அலைபேசி யில் வந்த ஓ.டி.பி எண்ணை உள்ளிடவும். அடுத்து முதன்மை அலைபேசியில் உள்ள வாட்ஸ்அப் code-யை ஸ்கேன் செய்யவும். அவ்வளவு தான் இப்போது முதன்மை வாட்ஸ்அப் கணக்கை மற்ற சாதனங்களிலும் எளிதாக பயன்படுத்தலாம். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் களுக்கும் வழங்கப்படுகிறது.

இது விரைவில் அனைவரது பயன்பாட் டிற்கும் வரும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வசதியைப் பயன் படுத்த ப்ரைமரி மற்றும் அனைத்து 

(secondary)  சாதனங்களும் சமீபத்திய வாட்ஸ் அப் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யப் பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.

No comments:

Post a Comment