சென்னை, ஏப்.19- உடல் உறுப்புக் கொடையில் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பிடிக்கும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (18.4.2023) நடந்தது. அதன் விவரம்:
அதிமுக உறுப்பினர் சி.விஜய பாஸ்கர்: உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு தொடர்ந்து 6 ஆண்டுகளாக நாட்டி லேயே முதல் இடத்தில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தெலங்கானா, மகாராஷ்டிரா நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டன.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கரோனா பேரிடரின்போது, கடந்த ஆண்டில் தெலங்கா னாவும், முந்தைய ஆண்டில் மகாராஷ் டிராவும் முன்னிலைக்கு வந்தன. ஆனாலும், உறுப்புக் கொடை பெறுவதில் தொடர்ந்து தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. அதிமுக ஆட்சியில் 13 அரசு மருத்துவமனைகளுக்குதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது மேலும் 23 அரசு மருத் துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 158 பேர் உறுப்புக் கொடை செய்துள்ளனர். இதன்மூலம் 553 உறுப் புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இது மிகப்பெரிய சாதனை. இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு முதலிடம் என்ற நிலை வர உள்ளது.
காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை
சி.விஜயபாஸ்கர்: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில், அதிமுக ஆட்சியின்போது, அரசு மருத்துவமனைகளில் முதலில் சிகிச்சை, பின்னர் அப்ரூவல் என்ற நிலை இருந்தது. தற்போது முதலில் அப்ரூவல், பின்னர் சிகிச்சை என்கிற நிலை உள்ளது.
மா.சுப்பிரமணியன்: அ.தி.மு.க. ஆட்சி யில் முதலமைச்சர் காப்பீட்டுக்கு பிரீமியம் ரூ.699. இப்போது ரூ.849. அதே போல, மருத்துவமனைகள் எண்ணிக்கை 970இல் இருந்து 1,760 ஆகவும், சிகிச்சை முறைகள் 1,027இல் இருந்து 1,513 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், வருமான வரம்பு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment