"திமிர் மு.க." என்று தடித்த வார்த்தைகளில் இவ்வார "ஜூனியர் விகடன்" அட்டையில் எழுதி, தி.மு.க. தலைவர் உருவத்துடன் வெளியிட்டு இருப்பது குறித்து இன்றைய "முரசொலி" - "கொழுப்பு விகடன்" என்று ஆரம் பித்து, அதற்குப் பரிவு காட்டியது தி.மு.க. தான் என்றும் விளக்கி இடித்துரை கொடுத்துள்ளது ஒரு பெட்டிச் செய்தியில்...
எந்த மொழியில் சொன்னால் 'கொழுப்பு ஏறியவர்களுக்கு'ப் புரியுமோ அந்த மொழியில் எழுதியுள்ளது. தவிர்க்க இயலாததுதான்.
அந்தக் "கொழுப்பை" அதற்கு ஏற்றியவர்கள், தி.மு.க. அமைச்சர் களும், தி.மு.க. மாவட்டச் செய லாளர்களும் தானே!
பக்கம் பக்கமாக முழுப் பக்க அட்டை விளம்பரம் உள்பட கொடுத்துக் கொடுத்து - கொழுப்பு ஏற்றி விட்டவர்கள் இனியாவது பாடம் கற்று, இனப் பகைமை எப்படி மாறாத விஷக் கொழுப்பு என்பதையாவது உணர்ந்து திருந்தினால் நல்லது!
அதுபோல பூணூல் மலருக்கும், சில பூணூல் ஏடுகளுக்கும் விளம்பரத்தை நிறுத்தினால் மட்டும் போதாது! இந்த மாதிரி ஏடுகளை புறக்கணிக்கவும் பழக்கிக் கொள்ளுங்கள்.
தந்தை பெரியார் சொன்ன "5 நோய் களின்" ஆபத்து புரிகிறதா - இப்போ தாவது?
"பாம்புக்குப் பால்வார்ப்பதும்
பார்ப்பன ஏடுகளுக்கு ஆதரவு தருவதும்
இரண்டும் ஒன்றுதான்" என்ற பாடம் இனியாவது புரிந்தால் சரி.
No comments:
Post a Comment