29.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பி.ஆர்.எஸ். தலைவரும், தெலங்கானா முதலமைச்சரு மான கே.சந்திரசேகர ராவ், புதுடில்லியில் கட்சியின் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளை அழைப்பதன் மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள ஒப்புதல். முதலமைச்சர் நேரில் சென்று அழைப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஜாதி அநீதி என்பது ஒரு பரந்த கலாச்சாரத்தின் மறுப்பு மற்றும் தண்டனையின்மையின் விளைவாகும். இதை எதிர்ப்பதற்கு, ஒடுக்குமுறையின் உண்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது என்கிறார்கள் கட்டுரையாளர்கள் மனோஜ் குமார் ஜா,எம்.பி. மற்றும் பேரா.கஜனா ஜமீல்.
தி டெலிகிராப்:
புகார் இல்லாவிட்டாலும், வெறுப்பூட்டும் பேச்சு வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment