அய்தராபாத், ஏப்.24 "நாடாளுமன்ற பிரபரி யோஜனா" திட்டத்தின் ஒரு பகுதியாக தெலங்கானாவில் உள்ள செவெல்லாவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பிரதமராவதற்கும், நாடு முழுவதும் சுற்றுவதற்கும் கனவு காண்கிறார். ஆனால் பிரதமர் பதவி காலியாக இல்லை. தெலங்கானா மக்களே சட்டமன்ற தேர்தலில் தயவு செய்து பாஜகவுக்கு வாக்களியுங்கள். தெலங் கானாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் வளர்ச்சி தடைபட்டுள்ளது மற்றும் ஊழல் ஆழமாகிவிட்டது. தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செய்திருப்பது அரசியல் சாசனத் துக்கு எதிரானது. தெலங்கானாவில் ஊழல் சந்திர சேகர ராவ் அரசின் கவுன்டவுன் தொடங்கியது.ஏனென்றால் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த தும், கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தின் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம். யாரும் தப்பிக்க மாட்டார்கள்.
2014இல் தெலங்கானா உருவானதில் இருந்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், கேசிஆர் தவறிவிட்டார். மாநிலத்தில் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, எஸ்எஸ்சி தாள்கள் கசிந்து வருகின்றன, தெலங்கானா மாநில சர்வீஸ் கமிஷன் தாள்களும் கசிந்து வரு கின்றன. கே.சி.ஆர் அரசால் லட்சக்கணக் கான இளைஞர்களின் எதிர்காலம் பாழா கியுள்ளது. வரும் தேர்தலில் உங்கள் கணக்கை தீர்த்து வைக்க இந்த இளைஞர்கள் தயாராக உள்ளனர். தெலங்கானாவில் காவல்துறையும் நிர்வாகமும் முற்றிலும் அரசியலாக்கப்பட் டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்
கருநாடகாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்தனர் ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது, இப் போது அய்தராபாத்திலும் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்வோம் என்று அமித்ஷா கூறி வருகிறார். தென் இந்தியா விலும் ஜாதி மதவாதத்தின் மூலம் ஆட் சியைப் பிடிக்க பிரிவினைவாத விதையை ஊன்றி வருகின்றனர்.
ஒருவேளை இவர்கள் முஸ்லீகளுக்கான இட ஒதுக்கீட்டில் கைவத்தால் அடுத்து ஒ.பி.சி இறுதியாக தாழ்த்தப்பட்ட சமூக இட ஒதுக் கீட்டை ஒழித்துவிடுவார்கள். அவர்களின் அடிஆழத்தில் உள்ள ஆசை ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இட ஒதுக் கீட்டின் மூலம் முன் னேறிவிடக்கூடாது என்பதுதான்.
முஸ்லீம் களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று தொடர்ந்து மேடைக்கு மேடை பேசி வருவதற்கான காரணமே நாளை இதே போல் காரணத்தைக் கூறி ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடும் நோக் கத்தில் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment