காவிரியில் கழிவு நீர்: கருநாடக அரசுக்கு தலைமைச் செயலர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

காவிரியில் கழிவு நீர்: கருநாடக அரசுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை, ஏப். 30- காவிரி ஆற்றில் பெங்களூருவில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்  டும் என கருநாடக தலைமை செயலா ளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு கடிதம் எழுதி யுள்ளார். 

அதில், காவிரி ஆற்றில் நடப்பு  ஆண்டு 2022-2023 இல் நீர் வழங்கும் காலத்  தில், இதுவரை 658 டி. எம்.சி நீர்  தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் நிர்ணயித்த நீரின் அளவைக் காட்டிலும் இந்த ஆண்டு 484 டி.எம்.சி கூடுதல் நீர்  வழங்கப்பட்டு உள்ளது. மேலும், நீர்  வழங்குவதற்கான தவணை காலம்  முடிவ தற்கு மே வரை அவகாசம் உள்ளது. 

இந்நிலையில், பெங்க ளூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைக ளில் இருந்து வெளியேற் றப்படும் கழிவு நீர், நேரடி யாக காவிரி ஆற்றில் ஆங் காங்கே பச்சை  நிறத்து டன், சாக்கடை நீரும் கலந்து  ஓடுகிறது. 

இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு  நீராகவே உள்ளது. எனவே, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப் பதை தடுப்பதற்கு தேவை யான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment