அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி - ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பணிகளில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு வேலை வாய்ப் பினை மறுக்கும் வகையில் - போட்டி நுழைவுத் தேர்வுகளை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே விண்ணப்பதாரர்கள் எழுத முடி யும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி அல் லாத மாநில மொழிகளில் பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கும் விதத்தில் ஒன்றிய அரசின் அறிவிக்கை வெளி வந்துள்ளது.
மத்திய ரிசர்வ் காவல்துறை படைக்கு ஆள் எடுத்திடுவதற்கான போட்டித் தேர்வு குறித்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள் ளது. இந்த போட்டித் தேர்வு ஏற்கெனவே 12 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தி வருவதற்கான மாற்று ஏற்பாடே. பெரும்பாலான வர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கும் நிலையாகவே உள்ளது.
நுழைவுத் தேர்வின் தன்மை
கணினி வழி நடைபெறும் இந்த போட்டித் தேர்வில் 100 கேள்வி களுக்கு பதிலளிக்க வேண்டுமாம். அறிவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன், பொது அறிவு, பொது அறிவுத் திறன், அடிப்படைக் கணக்கு, ஆங்கிலம் - ஹிந்தி மொழி ஆகிய நான்கு பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் 25 கேள்விகள் உள்ளதாக தேர்வு அமையும்.
இந்த நான்கு பிரிவுகளிலும் ஹிந்தி அல்லது ஆங்கில வழியில் மட்டும்தான் தேர்வு எழுத முடியுமாம்! நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறை ஒன்றிய அரசால் புகுத்தப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படைக்கு ஆங்கில வழியில் கல்வி கற்ற வர்கள் விண்ணப்பிப்பது ஒப் பீட்டளவில் மிகவும் குறைவு! ஹிந்தியில் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் தான் அதிக அளவில் இருக்கும். ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தான் சரளமாக தேர்வு எழுத முடியும். அதில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்திட முடியும். ஹிந்தி அல்லாத பிற மாநில மொழிகள் வழி பயின்றோர் இந்தப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு வெளிப்படையாகவே மறுக்கப்படு கிறது. இதனால் போட்டித் தேர் விற்கு விண்ணப்பிக்க முடியாத, விண்ணப்பித்தாலும் வெற்றி பெற முடியாத நிலை தான் ஏற்படும். மேலும் இந்தத் தேர்வில் தவறாகப் பதில் அளித்தால் ஒவ்வொரு தவ றான பதிலுக்கும் 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் கொடுமையும் உள்ளது.
இதுவரை ஹிந்தி அல்லாத 1.2 மாநிலமொழிகளில் நடத்தப்பட்டு வந்த தேர்வு இப்பொழுது ஹிந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி எனும் சங்பரி வார்களின் - நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு விரோதமான போட்டித் தேர்வுகளில் இப்பொழுது அறிவிக் கப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல் படைக்கான நுழைவுத் தேர்வு பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இந்த நிலையில் ஹிந்தி மொழியைத் தாய் மொழி யாகக் கொண்டவர்களுக்கே பணி வழங்கிடும் வகையில் போட்டித் தேர்வினை ஒன்றிய அரசு நடத்திட முன் வருவது - குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாகவே அமையும்.
மத்திய ரிசர்வ் காவல் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வின் விதிமுறைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இதுவரை நிலவி வந்தது போன்று மாநில மொழிகளிலேயே தேர் வினை எழுதிடும் முறையே தொடர்ந்திட வேண்டும், நாட்டில் பன்முகத்தன்மை காப் பாற்றப்பட வேண்டும், சமமான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண் டும் - என்பதே எல்லோரது எதிர் பார்ப்பும், வேண்டுதலுமாக உள்ளது.
No comments:
Post a Comment