ஒன்றியம், கிளைகள் தோறும் பகுத்தறிவாளர்கள் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 21, 2023

ஒன்றியம், கிளைகள் தோறும் பகுத்தறிவாளர்கள் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு

தருமபுரி, ஏப். 21- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-.4.-2023அன்று காலை 11 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலை வர் கதிர் செந்தில் குமார் தலைமை யேற்றார். 

மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் ஆகியோர் முன் னிலை ஏற்றனர். மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தின் நோக்கத்தை பற்றி மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி, ஆகியோர்  உரையாற்றினர்.

மண்டலத் தலைவர்  அ.தமிழ்ச் செல்வன், ஆசிரியரணி அமைப்பாளர் த.மணிவேல், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, மாநில  இளை ஞரணி துணை செயலாளர் மா.செல்ல துரை, சோபியா. மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் ச.கி.வீரமணி, ஆகி யோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். 

இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாநி லத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலா ளர் வி.மோகன், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

1. கிளைக் கழகம் முதல் நகரம், ஒன் றியம் வரை பகுத்தறிவாளர் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கையை முடித்து ஒன்றிய நகர அளவில் அமைப்பை ஏற் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.    

2. வரும் காலங்களில் பகுத் தறி வாளர்கள் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை முடித்து அமைப்பு ஏற் படுத்தப்பட்ட பிறகு பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

3.மதச்சார்பற்ற நாடாக, அரசாக, உள்ள நிலையில் அறிவியல் மனப் பான்மை வளர்க்க வேண்டும் என அரசு ஆணை, நீதிமன்ற தீர்ப்புகள் பல இருந்தும் அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் ஆலய வழிபாடு போல மத தொடர்புடைய கடவுள் படங்களை வைப்பது, கோயில் கட்டுவது, பூஜை புனஸ்காரங்கள்  செய்வதை கண்டிப்ப துடன், அப்படி பொறுப்பற்ற முறையில் செயல்படும் தொடர்புடைய  அலு வலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு அலுவல கங்களில் வைக்கப்பட்டுள்ள மத தொடர்புடைய கடவுளர் படங்களை அகற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் கேட்டுக் கொள்கிறது. மேற் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment