இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம்
புதுடில்லி, ஏப்.11 இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப் பதற்கான காரணங்கள் குறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை நேற்று (10.4.2023) வெளியிட்ட புள்ளி விவரத்தில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு கூறும்போது, “கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. போதிய அளவில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. புதிய வகை கரோனா வைரஸ் உருவாகி இருக்கிறது.
இந்த 3 காரணங்களால் இந்தி யாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது’’ என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்ட படி நாடு முழுவதும் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் அவ சர கால ஒத்திகை நடத்தப்பட்டது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டில்லியில் உள்ள ஆர்எம்எல், எய்ம்ஸ் மருத் துவமனைகளில் அவசர கால ஒத்திகையை ஆய்வு செய்தார்.
இதன்பிறகு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, ‘‘கடை சியாக கரோனா ஒமிக்ரானின் பி.எப்.7 வகை வைரஸ் பரவியது. தற்போது எக்ஸ்பிபி 1.16 என்ற வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. பொதுமக்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலை தடுக்க முடியும்’’ என்றார்.
4-ஆவது அலை ஏற்படுமா?
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா கூறும்போது, “இந்தியாவில் பரவும் எக்ஸ்பிபி 1.16 வைரஸை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதன் காரணமாக இந்தியாவில் 4-ஆவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா, இல்லையா, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவுமா என்பதை இப்போதைக்கு கணக்கிட முடியாது’’ என்றார்.
இந்திய சுகாதாரத் துறை நிபு ணர்கள் கூறும்போது, ‘‘தற்போது பரவும் கரோனா வைரஸால் மருத் துவமனைகளில் அனுமதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உயிரிழப்பும் மிக குறை வாக இருக்கிறது. இரு தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போடப் பட்டிருப்பதால் 4-ஆவது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். எனினும் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப் பிடிப்பது உள்ளிட்ட கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்’’ என்றனர்.
No comments:
Post a Comment