கோவை,ஏப்.24- கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் உடு மலைப் பேட்டையைச் சேர்ந் தவர் கார்த்தி கேயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய் குமார் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்ற மாணவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். இதை அடுத்து கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவரின் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்ததால் மூளைச் சாவு ஏற்பட்டது மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.
இதனை தொடர்ந்து, மாணவரின் இரண்டு சிறுநீர கங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பி.எஸ்.ஜி மருத்துவ மனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தோல், கணையம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் கொடையாக வழங் கப்பட்டன. மூளைச்சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளின் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர்.
No comments:
Post a Comment