சட்டமன்ற தீர்மானத்தின் எதிரொலி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

சட்டமன்ற தீர்மானத்தின் எதிரொலி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை, ஏப். 11- ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவ தோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் பலி வாங்கி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம் ஏராளமான குடும்பங்களை சீரழித்துள்ளது.

உயிர் கொல்லியான ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி, 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ் நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர் தரப்பில் இருந்து, தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்டது. இதைய டுத்து, தமிழ்நாடு அரசும், ஆளுநர் கேட்ட விளக்கத்தை தெரிவித்தது. ஆனா லும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வில்லை. உயிர்ப்பலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்றால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்த னர்.

இந்த சூழ்நிலையில், சுமார் 4 மாதங் களுக்கு பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக் காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் 8ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்த விளக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத் துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகா ரம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சட்டப் பேரவைக்கு அதிகாரம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோ தாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய மறுநாளே அதாவது 9ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப் பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுந ருக்கு மீண்டும் அனுப்பிவைக்க வேண் டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங் களுக்கு தடை விதிக்கும் மசோதாவை மு.க.ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார். 24ஆம் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பிவைத்தது. இந்த முறையாவது ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என்று தமிழ்நாடு மக்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவ லோடு காத்திருந்தனர்.

இதற்கிடையே, சென்னை கிண்டி யில்  உள்ள ஆளுநர் மாளிகையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களோடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 6ஆம் தேதி கலந்துரை யாடினார். அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "மசோதா நிலுவையில் இருக்கிறது என்றால், ஒப்புதல் வழங்கவில்லை என்றுதான் அர்த்தம்" என்று பேசினார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருந்தது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் கருத்துக்கு மு.க.ஸ்டா லின் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவதை நியாயப்படுத்து வது மிக மோசமான முன்னுதாரணம், தமிழ்நாடு நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்" என்று கூறியிருந்தார். அரசியல் கட்சிகளும் ஆளுநருக்கு எதி ராக கண்டனங்களை தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தன.

இதேபோல, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், "தமிழ் நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டார். காங் கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன் றிய அமைச்சர் ப.சிதம்பரமும், 'ஆளு நர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதாக கண்டனம்' தெரிவித்து இருந்தார்.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக நேற்று (10.4.2023) தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு வலியுறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை கேட்டுக் கொள்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலின் துரிதமாகவும், தொடர்ச்சியாகவும் எடுத்த நடவடிக் கையால் நேற்று (10.4.2023) ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதலுக் காக அனுப்புவது, நிராகரிப்பு என கண்ணாமூச்சி ஆடி வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த அக் டோபர் மாதத்தில் இருந்து ஒரு வழியாக 172 நாட்களுக்கு பிறகு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தமிழ் நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மூடு விழா காணப்பட்டு, சூதாட்டத் துக்கு அடிமையாகி உயிரையும், பணத் தையும் இழக்கும் சம்பவங்கள் தடுக் கப்படும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசிதழில் வெளியீடு

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

தண்டனை விவரங்கள்

அந்த சட்டம் நடைமுறைக்கு வருவ தால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:-

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு கள், பணம் அல்லது வேறு வெகு மதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டு களை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம் பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2ஆம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன் லைன் விளையாட்டுகளை அளிப்போ ருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல் லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக் கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு கள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித் தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண் டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறை தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக் கப்படும்.

No comments:

Post a Comment