பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் பேரழிவை கொண்டு வருவார்கள் - நிதிஷ் குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 16, 2023

பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் பேரழிவை கொண்டு வருவார்கள் - நிதிஷ் குமார்

பாட்னா, ஏப். 16- 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் பேரழிவை கொண்டுவருவார்கள் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் அணி திரண்டு வருகின்றன.

அந்த வகையில் எதிர்க் கட்சிகளை ஒருங் கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சரும், அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வரு கிறார்.

இந்நிலையில் நிதிஷ் குமார் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் ஈடு பட்டு வருகிறேன். 

ஆனால், நான் பிரதமர் பதவிக்கு ஆசைப் படவில்லை. 2024 நாடா ளுமன்ற தேர்தலுக்கு முன்பு மத்தியில் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சி களும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும்.

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்பு கிறேன். நீங்கள் உங்க ளுக்கு மட்டும் பேர ழிவை கொண்டு வரு வதில்லை. 

ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை கொண்டுவருகிறீர்கள். 

எங்களுக்கு  வாக்களிப்பீர்கள் என்றால் உங்க ளுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த நாட்டிற்கும் நன்மையை கொண்டு வருவீர்கள்” என்றார்.

No comments:

Post a Comment