தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுட்டுக்கொலை! உத்தரப்பிரதேசத்தில் பதற்றம்
கான்பூர், ஏப். 18 உத்தரப்பிரதேசத்தில் அரசியல்வாதி அத்திக் அகமது, காவல் துறை முன்பாக, (15.4.2023) சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டி ருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தின் கோட்ரா கிராசிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னியை நடுச் சாலையில் சுட்டுக் கொன்றனர். தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ரோஷ்னி தேர்வுக்காக கல்லூரிக்குச் சென்றதாக காவல்துறை கண்காணிப் பாளர் ராஜ் ராஜா தெரிவித்தார். முற்பகல் 11.30 மணியளவில் அவர் திரும்பிக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக காவல் துறையினர் கொலை யாளிகளைத் தேடி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்ட அரசியல் பிரமுகர் - இது மத்தியப் பிரதேசத்தில்...
அதே போல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் துப்புரவு தொழிலாளியை அரசியல் பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட முன்றுள்ளார். அவரது வீட்டில் உள்ளவர்கள் "தினசரி குப்பைகளை வெளியே வீசி விடுவார்கள். இதனால் துப்புரவு தொழிலாளி "தினசரி ஒரு வாளி அல்லது ஏதாவது பையில் குப்பைகளை சேகரித்து வாச லில் வையுங்கள். நாங்கள் வந்து எடுத்துச்செல்கிறோம். இப்படி சாலை யில் வீசினால் காற்றில் இந்த குப்பைகள் பரவி சுற்றுச் சூழலை சீர்கெடுத்துவிடும்" என்று கூறினார். ஆனால் அவர்களோ "உனக்குச் சம்பளம் எதற்கு? குப்பை பொறுக்குவதற்குத்தானே, ஆகவே எங்களுக்கு ஆலோசனை கூறுவதை நிறுத்திவிட்டு வேலையைப் பார்" என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர் வீட்டில் முன்பு உள்ள குப்பையை அகற்றமாட்டேன் என்று கூறி அவர் களிடம் குப்பைத்தொட்டி அல்லது வாளியில் வைத்தால் மட்டுமே இனி மேல் குப்பைகளை அள்ளுவேன் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளரும், பிரபல அரசியல் கட்சியின் பிரமுகருமான அந்த நபர் கைத்துப்பாக்கியை எடுத்து துப்புரவுத் தொழிலாளியை நோக்கி சுடத் துவங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த துப்புரவுத் தொழிலாளி அங்கிருந்து உயிர் பிழைக்க ஓடி விட்டார். இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்த போது அவர்களோடு சமாதானமாகச் செல்லுங்கள் என்று கூறி புகாரை வாங்க மறுத்து விட்டனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் துப்பாக்கிக் கலாச்சாரம் பல்கிப் பெருகி குடிசைவீட்டில் வசிப்பவர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை துப்பாக்கியை வைத்துகொண்டு கொலைகளை சாதாரனமாக செய்கின்றனர். அங்குள்ள காவல்துறையும், நீதிமன்றங் களும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment