கொஹிமா, ஏப். 1 திரிபுரா மாநில சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் ஆபாசப் படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது. இதையடுத்து சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாக்பாசா தொகுதி பாஜகசட்டமன்ற உறுப் பினர் ஜதப் லால் நாத், சட்டமன்றத் தில் அமர்ந்து கொண்டே தனது அலைபேசியில் ஆபாச படம் பார்த் தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
நிதிநிலை அறிக்கை தொடர் பான விவாதம் சட்டமன்றத்தில் நடந்த போது தான், இந்த நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகிறது. பேர வைத் தலைவரும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பேசிக் கொண் டிருந்தபோது பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் காட்சிப் பதிவைப் பார்த்துள்ளார். அதனை அவரது பின்னால் அமர்ந்திருந்த யாரோ ஒருவர் படம் பிடித்துள்ளார்.
அந்தக் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது தாக்கீது அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஆபாசப்படம் பார்ப் பது ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன்பு மத்தியப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர், கருநாடக பாஜக அமைச்சர் லட்சுமன் சுவடி மற்றும் பாஜக சட்டமன்ற உறுப் பினர் சி.சி. பாட்டில் அதே போல் கோவா உள்ளிட்ட சில மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டு இருக்கும் போதே ஆபாசப்படம் பார்த்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணம்தான் உள்ளது. இருப்பினும் பாஜக தலைமை இதற்கு எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதிகாத்து வருகிறது, கருநாடக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை விவாதத்தின் போது ஆபாசப்படம் பார்த்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் தற் போது மாநிலத்தின் துணை முதல மைச்சராக உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment