சென்னை, ஏப். 13- பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி, அக்கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு பாஜகவிலிருந்து விலகியுள் ளார்.
அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், பா.ஜ-க. பொருளாதாரப் பிரிவின் தமிழ்நாடு மாநில செய லாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் கேசவ விநாய கமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப் பினர்களிடமும் நிர்வாகிகளி டமும் அவசியமில்லாத விடயங்க ளுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வ தாலும் எந்தக் காலத்திலும் கட்சி வளராது.
ஜனநாயகத்துக்கு எதிராக எங்களை வற்புறுத்தி சில விடயங் களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும் என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும், கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த நிர்மல் குமாரை போன்ற நிர்வாகி களையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி எந்த ஒரு கட்சி வேலையும் செய்ய விடாமல் செய்தனர்.
மேலும் ஆருத்ரா போன்ற நிதி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ள வில்லை. இதனால் நான் விலகிக் கொள்கிறேன். இதற்கு முழுக் காரணமாக இருக்கும் பொருளா தாரப் பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், நரசிங்க பெருமாள் இவர்களை எல்லா ரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள்தான் சரியாகச் செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன்.
பணம் உள்ளவர்களுக்கு மட் டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பதே உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன இதற்கு மேலும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தேன் என் றால் எனது உயிருக்கே பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக விலகிக் கொள் கிறேன் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment