முஸ்லிம்கள் உதவியுடன் நடந்தது
ஹிந்து வீரரின் இறுதிச் சடங்கு
சிறிநகர், ஏப். 3- ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உயிரிழந்த சி.அய்.எஸ்.எப்., வீரரின் இறுதிச் சடங்குக்கு, உள்ளூர் முஸ்லிம்கள் உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பல்பீர் சிங் (55). இவர், பஞ்சாபின் அமிர்த சரசில், சி.அய்.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந் தார். பல்பீர் சிங்கின் சகோதரர் சதீஷ்குமார் சிங், கடந்த ஆண்டு ஏப்., 13இல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இவரது முதலாமாண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, பஞ்சாபில் இருந்து குல்கமில் உள்ள கார்கன் கிராமத்துக்கு பல்பீர் சிங் விடுப்பில் வந்தார்.
வீட்டில் இருந்தபோது 31.3.2023 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பல்பீர் சிங் உயிரிழந்தார். அந்த கிராமத்தில் பல்பீர் சிங்கின் குடும் பம் மட்டும் தான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற அனைவரும் முஸ்லிம்கள்.
எனவே, முஸ்லிம் மக்கள் திரண்டு வந்து, பல்பீர் சிங் கின் இறுதிச் சடங்குக்கு தேவை யான அனைத்து உதவிகளையும் உடன் இருந்து செய்தனர். அவரது உடலை சுமந்து சென்று, எரியூட் டப்படும் வரை உடன் இருந்தனர். இந்த சம்பவம், குல்கம் மாவட்டம் முழுதும் நெகிழ்ச்சியை ஏற்படுத் தியது.
No comments:
Post a Comment