கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தில் துணைத் தலைவர் வழிகாட்டும் உரை!
சென்னை, ஏப். 1- சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழிகாட்டுதல் உரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில், 25-.3.-2023 சனிக்கிழமை அன்று, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள, மு.கருணாநிதியின் ஆராய்ச்சி நிலையம் மற்றும் திராவிட மாணவர் கழகம் இணைந்து “அரசமைப்புச் சட்டமும், சமூக நீதியும்” எனும் தலைப்பில் சட்டக் கல்லூரி மாணவர் களுக்கான ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் நடை பெற்றது. திட்டமிட்டபடி காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
தொடக்க விழா!
முன்னதாக காலை 9 மணிக்கு பதிவுகள் தொடங் கப்பட்டது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நிகழ்வைத் தொடங்கி வைக்க, மாணவர் கழகத்தின் சட்டக்கல்லூரி மாநில அமைப் பாளர் மு.இளமாறன் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலை மையேற்று உரையாற்றினார். பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
வகுப்புகளும்! ஆசிரியர்களும்!
காலை 10 மணிக்கு, ”இட ஒதுக்கீடு தத்துவம் - தேவை, வரலாறு (1950 வரை)” எனும் தலைப்பில் முதல் வகுப்பு கழகப் பொருளாளர் வீ.குமரேசன், ”இந்திய அளவில் சமூக நீதி வரலாறும் சட்டச் சிக்கல்களும் (1950 முதல் இன்று வரை)” எனும் தலைப்பில் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, “தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாறு (1950 முதல் இன்று வரை)”, எனும் தலைப்பில் கழகப் பிரச் சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, “தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களும், நடைமுறையும்” எனும் தலைப்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமூக நீதி கூறுகளும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களும்” எனும் தலைப்பில் மேனாள் நீதியரசர் அரி. பரந்தாமன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். ஒரு மணி நேர வகுப்பில் 40 நிமிடம் பாட மும், 20 நிமிடம் கேள்வி பதில் பகுதியும் இடம்பெற்றன.
அரசமைப்புச் சட்டங்களும்! திராவிடர் கழகமும்!
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்ட கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாணவர்களுக்கு வழிகாட்டும் உரை வழங்கினார். அவர் தனது உரையில் திராவிடர் கழகம் மக்களுக்கு பயன்படாத சட்டங்களை ஒழிக்கவும், ஆக்கப்பூர்வமான சட்டங்களை கொண்டு வரவும் செய்த வரலாற்றை சுவைபட எடுத்தியம்பினார். தந்தை பெரியார் ஏன் எதிர்வழக்காடவில்லை? நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதி முன்னிலையில் எப்படி சிங்கம் போல அவர் கர்ச்சனை செய்தார்? என்பதைக் கூறி, சட்டக்கல்வியோடும் சமூக நீதி கல்வியும் தேவை! அதற்கு மாணவர்கள் தந்தை பெரியாரைப் பயில வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, கவிஞர் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலை கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த சான்றிதழ் களை வழங்கினார். வகுப்பாசிரியர்களான வழக்குரை ஞர் சு..குமாரதேவன், கழகப்பொருளார் வீ.குமரேசன், மேனாள் நீதியரசர் அரி.பரந்தாமன் ஆகியோருக்கு கவிஞர் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.
சென்னையை சுற்றியுள்ள சட்டக் கல்லூரிகளில் பயிலும் 50 மாணவர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர் பாண்டியன், இணைப்புரை வழங்கி வகுப்புகளை ஒழுங்குபடுத்தினார். வகுப்புகளின் தன்மையை கருத் தில் கொண்டு சில மாணவர்கள் தங்களின் பகுதி களிலும் இது போன்ற வகுப்புகளை நடத்த வேண்டும் என்று ஆவலுடன் வேண்டுகோள் விடுத்தனர். மாண வர்கள் கழகமும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றது. அனைவருக்கும் வகுப்புகள் குறித்த மதிப்பீட்டு படிவம் வழங்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன. இறுதியாக வகுப்பாசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் ஆகியோருடன் மாணவர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.
கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!
கலந்து கொண்ட மாணவர்களுக்கு பயிலரங்கு சார்பில் பெரியார் புத்தக நிலையத்தில் உள்ள புத்தகங் கள் 50 விழுக்காடு தள்ளுபடியில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் ஆவலுடன் அதை பயன்படுத்திக்கொண்டனர். நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாநில இளைஞரணி துணை செயலா ளர் சென்னை சுரேஷ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், வழக்குரைஞர்கள் தளபதி பாண்டியன், துரை அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் சென்னை மண் டல திராவிட மாணவர் கழக செயலாளர் ம. சுபாஷ் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.
No comments:
Post a Comment